Nov 15, 2026
Thisaigal NewsYouTube

மோசமான வானிலையால் திரெங்கானுவில் தரையிறங்கிய சீன விமானம் - 207 பயணிகள் அவதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மோசமான வானிலையால் திரெங்கானுவில் தரையிறங்கிய சீன விமானம் - 207 பயணிகள் அவதி

சீனாவிலிருந்து வந்த கிங்டாவ் ஏர்லைன்ஸ் (Qingdao Airlines) விமானம் மோசமான வானிலை காரணமாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் திரங்கானுவுக்குத் திருப்பிவிடப்பட்டதால், அதில் பயணம் செய்த பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் உட்பட 207 பேர் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

நேற்று பிற்பகல் மோசமான வானிலை காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமிட்ட நிலையில் இருந்த அவ்விமானத்தை, பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திற்கும் திருப்பிவிட முடியாமல் போனதால், இறுதியாக மாலை 5.30 மணியளவில் சுல்தான் மாஹ்மூட் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டதாக கோலா திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்லி முஹமட் நூர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் மேலதிக ஏற்பாடுகள் செய்யப்படும் வரை கோலா திரங்கானு மற்றும் கோலா நெருஸ் பகுதிகளில் உள்ள மூன்று தங்கும் விடுதிகளில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →