Nov 15, 2026
Thisaigal NewsYouTube

கனமழையால் ஐ-சிட்டி, செக்‌ஷன் 7 பகுதிகளில் திடீர் வெள்ளம் – போக்குவரத்து பாதிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கனமழையால் ஐ-சிட்டி, செக்‌ஷன் 7 பகுதிகளில் திடீர் வெள்ளம் – போக்குவரத்து பாதிப்பு

சிலாங்கூர் மாநிலம், ஷா ஆலம், ஐ-சிட்டி மற்றும் செக்‌ஷன் 7 பகுதிகளில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த கனமழையால் சாலைகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

இன்று பிற்பகல் 1 மணியளவில் தொடங்கிய மழையால் பல வாகனங்கள் செல்ல முடியாமல் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

குறிப்பாக ஐ-சிட்டி பகுதியில் சாலைகளிலும், செக்‌ஷன் 7பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்திலும் வெள்ளநீர் சூழ்ந்தது.

இது தொடர்பான காணொளிகளைப் பொதுமக்கள் திரேட்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்ததுடன், வெள்ளப் பகுதிகளைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தினர்.

இதற்கிடையில், இன்று மாலை 5 மணி வரை சிலாங்கூர், கோலாலம்பூர் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →