Sep 27, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிக் கட்டிடத்தின் 1-வது மாடியில் ஏறி நின்ற மாணவி: ஹிஸ்டீரியா கோளாறால் பரபரப்பு
தற்போதைய செய்திகள்

பள்ளிக் கட்டிடத்தின் 1-வது மாடியில் ஏறி நின்ற மாணவி: ஹிஸ்டீரியா கோளாறால் பரபரப்பு

Share:

கிளந்தான், பாச்சோக் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் 14 வயது மாணவி ஒருவர் திடீரென ஹிஸ்டீரியா பாதிப்புக்குள்ளாகி, வகுப்பறை ஜன்னல் வழியாக வெளியேறி முதல் மாடியின் குறுகிய நடைபாதையில் ஏறி நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆசிரியர்கள் அவரை மீட்க முயன்றும், அவர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதால் தீயணைப்புத் துறையினரின் உதவி கோரப்பட்டது. சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் மாணவியைப் பத்திரமாக மீட்டனர்.

இது குறித்துப் பேசிய மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் இஸ்மாயில் ஜமாலுடின், அந்த மாணவி ஏற்கனவே ஹிஸ்டீரியா மற்றும் மனநலச் சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது அவர் காயமின்றி தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சமூக வலைதளங்களில் பரவுவது போல இது தற்கொலை முயற்சி அல்ல என்றும், பொதுமக்கள் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்