ஆசிரியர் சேவைத் துறையில் உள்ளவர்கள், சட்ட அம்சங்கள் தொடர்பான விழிப்புணர்வையும் கொண்டிருக்குமாறு தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கமான என்.யூ.தி.பி. கேட்டுக்கொண்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், அவர்கள் இத்தகைய விழிப்புணர்வைக் கொண்டிருப்பது அவசியமாகும் என்று என்.யூ.தி.பி. யின் தலைவர் அமிருடின் ஆவாங் குறிப்பிட்டார்.
ஆசிரியர் சேவை, கற்பித்தல் தொடர்பான விவகாரங்கள், புறப்பாட நடவடிக்கைகள், பள்ளி நிர்வகிப்பு முறை தொடர்பில், ஆசிரியர்களுக்கு எதிராக இந்த மே மாதம் வரை 8 புகார்களை என்.யூ.தி.பி. பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டங்கள் தொடர்பான தெளிவை பெறுவது மூலம், தங்கள் பணி காலத்தில் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்று அவர்களால் பகுத்தறிய முடியும் என்று அமிருடின் ஆவாங்குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


