Sep 7, 2026
Thisaigal NewsYouTube
கேஎல்ஐஏ-வில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் கைது - மனநலப் பிரச்சினைக்கான மருந்தை உட்கொள்ள மறந்ததால் விபரீதம்
தற்போதைய செய்திகள்

கேஎல்ஐஏ-வில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் கைது - மனநலப் பிரச்சினைக்கான மருந்தை உட்கொள்ள மறந்ததால் விபரீதம்

Share:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் முனையம் 1-இல் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் 27 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீன நாட்டவரான அவர், நேற்று பிற்பகல் 1.19 மணியளவில் புறப்பாட்டு மண்டபத்தில் ஓடியும், பாடியும், நடனமாடியும் பயணிகளைத் தொந்தரவு செய்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கட்டுப்படுத்தினர்.

அப்பெண் மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவர் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை உட்கொள்ள மறந்துவிட்டதாக அவரது கணவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர் காஜாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மனநலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சம்பவம் குறித்து தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கேஎல்ஐஏ போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து