Sep 12, 2026
Thisaigal NewsYouTube
பந்திங் உணவகத்தில் அரிய வன விலங்குகளின் பாகங்கள் பறிமுதல் – உரிமையாளர் கைது
தற்போதைய செய்திகள்

பந்திங் உணவகத்தில் அரிய வன விலங்குகளின் பாகங்கள் பறிமுதல் – உரிமையாளர் கைது

Share:

சிலாங்கூர் மாநிலம் பந்திங்கில் 15 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான எறும்புத்தின்னி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளின் பாகங்கள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள பெண் உணவக உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி தென்மண்டல ஒருங்கிணைந்த வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ், தேசிய வன விலங்குகள் மற்றும் பூங்காக்கள் துறையான பெர்ஹிலித்தான் அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து சம்பந்தப்பட்ட உணவகத்தில் சோதனையை மேற்கொண்டனர்.

இச்சோதனையில் எறும்புத்தின்னி, மான், தவளை, புனுகுப்பூனை மற்றும் மென்மையான ஓடு கொண்ட ஆமைகளின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் பொட்டலங்களுடன், உறைவிப்பான் மற்றும் கைப்பேசியும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் விசாரணைக்காக மாவட்ட பெர்ஹிலித்தான் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

வனவிலங்கு குற்றங்களைத் தடுக்க அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என பெர்ஹிலித்தான் தெரிவித்துள்ளது.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்