Sep 15, 2026
Thisaigal NewsYouTube
அக்டோபர் 10-ஆம் தேதி தனது கனவுக் காதலி பெல்லாவை கரம் பிடிக்கிறார் சயிட் சாடிக்
தற்போதைய செய்திகள்

அக்டோபர் 10-ஆம் தேதி தனது கனவுக் காதலி பெல்லாவை கரம் பிடிக்கிறார் சயிட் சாடிக்

Share:

மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சயிட் சாடிக் சயிட் அப்துல் ரகுமான் , பாடகியும் நடிகையுமான பெல்லா அஸ்தில்லா-வை வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளார்.

தன்னுடன் காதலையும் வாழ்க்கையையும் பகிர்ந்துகொள்ளும் பெல்லா தான் தனது வாழ்க்கையின் மிகப் பெரிய அர்த்தம் என சயிட் சாடிக் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திருமண நாளை தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திருமண ஏற்பாடுகள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூவார் மற்றும் சபா-விலும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இரு வீட்டாரின் பங்கேற்பில் திருமண ஏற்பாடுகள் 60 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக பெல்லா அஸ்தில்லா தெரிவித்துள்ளார்.

Related News