Sep 15, 2026
Thisaigal NewsYouTube
குடிநுழைவுத் துறை லோரி மோதிய விபத்தில் 3 பேர் பலி – தீவிர விசாரணை நடத்த அன்வார் உத்தரவு
தற்போதைய செய்திகள்

குடிநுழைவுத் துறை லோரி மோதிய விபத்தில் 3 பேர் பலி – தீவிர விசாரணை நடத்த அன்வார் உத்தரவு

Share:

கோலாலம்பூர் ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சந்திப்பில் இன்று புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் குடிநுழைவுத் துறை லோரி ஒன்றும், காரும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

சிவப்பு விளக்கை மீறிச் சென்றதாகக் கூறப்படும் அந்த லோரி, காரை மோதிய பின்னர் சாலையோரம் நின்றிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை மோதியது.

இதில் 53 வயது தந்தை, 25 மற்றும் 12 வயதுடைய அவரது இரு மகள்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

55 வயதான தாயார் படுகாயமடைந்தார்.

இந்நிலையில், இவ்விபத்து தொடர்பாக லோரி ஓட்டுநரும், கார் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இவ்விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Related News

24 மணி நேர கேகே மார்ட் கடைகள் இனி பாதுகாப்பு மையங்களாக செயல்படும் - கோலாலம்பூர் போலீஸ் அசத்தல் திட்டம்

24 மணி நேர கேகே மார்ட் கடைகள் இனி பாதுகாப்பு மையங்களாக செயல்படும் - கோலாலம்பூர் போலீஸ் அசத்தல் திட்டம்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு