Sep 6, 2026
Thisaigal NewsYouTube
2027-இல் அதிகரிக்கும் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை – நாடு முழுவதும் 1,780 கூடுதல் வகுப்பறைகள்
தற்போதைய செய்திகள்

2027-இல் அதிகரிக்கும் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை – நாடு முழுவதும் 1,780 கூடுதல் வகுப்பறைகள்

Share:

2027-ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், நாடு முழுவதும் 1,780 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தீபகற்ப மலேசியா மற்றும் லபுவான்-ல் 668 மில்லியன் ரிங்கிட் செலவில் 524 திட்டங்களின் கீழ் 1,255 சாதாரண வகுப்பறைகளும், ஒருங்கிணைந்த சிறப்புக்கல்வித் திட்ட மாணவர்களுக்காக 525 பி.பி.கே.ஐ வகுப்பறைகளும் அமைக்கப்பட உள்ளன.

அதேவேளையில், சரவாக்கில் 81.5 மில்லியன் ரிங்கிட் செலவில் 210 வகுப்பறைகளும், சபாவில் 58 மில்லியன் ரிங்கிட் செலவில் 112 வகுப்பறைகளும் கட்டப்பட உள்ளன.

இதன் மூலம் ஆயிரக்கணக்கான கூடுதல் மாணவர்களுக்கு இடவசதி கிடைக்கும் என கல்வியமைச்சு இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஏற்கெனவே திட்டமிட்ட காலத்துக்கு முன்பே சில திட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் 2026 டிசம்பர் மாதத்திற்குள் கட்டம் கட்டமாக நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2027-ஆம் ஆண்டு முதல் ஆறு வயது குழந்தைகள் முதலாம் ஆண்டில் சுமூகமாக சேர்வதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து