பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி, டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலில் இணையலாம் என்று கூறப்படுகிறது. புதிய அரசியல் கட்சியை அமைக்கும் திட்டம் தற்போதைக்கு தமக்கு இல்லை என்று 74 வயதான டாக்டர் இராமசாமி அறிவித்து இருந்தார்.
பெரிக்காத்தான் நேஷனலின் பொதுச் செயலாளரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஹம்ஸா ஸைனுதீனை அண்மையில் டாக்டர் ராமசாமி சந்தித்து இருப்பது, பெரிக்காத்தான் நேஷனலில் இணைவதற்கான ஆருடங்கள் உறுதி செய்யப்படுவதைப் போல உள்ளன.
தமது அரசியல் தோழர் களான சதீஷ் முணியாண்டி மற்றும் டேவிட் மார்ஷால் ஆகியோருடன் டாக்டர் இராமசாமி, பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளருமான ஹம்ஸா ஸைனுதீனுடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
எனினும் இது பெரிக்காத்தான் நேஷனலில் இணைவதற்கான சந்திப்பு அல்ல. நாடாளுமன்ற உறுப்பினராக தாம் முன்பு இருந்த போது ஹம்ஸா ஸைனுதீன் தமது நண்பராகவே இருந்துள்ளார். நட்பின் அடிப்படையில் நடைபெற்ற சந்திப்பே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்று டாக்டர் இராமசாமி விளக்கம் அளித்துள்ளார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


