Sep 15, 2026
Thisaigal NewsYouTube
குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி
தற்போதைய செய்திகள்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

Share:

குவாந்தான் மாநிலம் சுங்கை ருவான் பகுதியில் உள்ள ஓய்வு விடுதியின் மீன் பிடி குளத்தில் தவறி விழுந்த தனது 8 வயது மகனை காப்பாற்ற முயன்ற 46 வயது தந்தை முஹமட் ஹாஃபிட்ஸ் சே டின் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ரவூப் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் ஷாரில் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று சனிக்கிழமை பிற்பகல் சுமார் 3 மணியளவில் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மீன் பிடிக்கப் பயன்படுத்திய பிளாஸ்டிக் ரொட்டிப் பையை எடுக்க முயன்ற போது சிறுவன் குளத்தில் தவறி விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், மகனை காப்பாற்ற குளத்தில் குதித்த தந்தை நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் முஹமட் ஷாரில் தெரிவித்துள்ளார்.

Related News