Sep 12, 2026
Thisaigal NewsYouTube
ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்
தற்போதைய செய்திகள்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

Share:

தேசிய இருதயக் கழகமான ஐஜேஎன்னில் சிகிச்சை பெற்று வரும் துணைப் பிரதமர் ஃபாடில்லா யுசோஃப் மற்றும் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆகியோரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும், அவரது மனைவி டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

கடந்த வாரம் ஃபாடில்லா யுசோஃப்பிற்கு இதய அறுவைச் சிகிச்சையும், கடந்த வெள்ளிக்கிழமை Ismail Sabri-க்கு இதயத் துடிப்பை சீராக்கும் கருவி பொருத்தும் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், ஃபாடில்லா யுசோஃப் நல்ல உடல்நிலையில் இருப்பதாகவும், மேலும் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், இஸ்மாயில் சப்ரி தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சொத்துப் பிரகடனம் தொடர்பான வழக்கில், இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அவர் தற்போது சிகிச்சையில் இருப்பதால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இருவரும் விரைவில் குணமடைந்து, மக்களுக்கும் நாட்டுக்கும் தொடர்ந்து சேவையாற்ற தேவையான உடல்நலமும் வலிமையும் பெற வேண்டும் என தானும் டாக்டர் வான் அஸிஸாவும் பிரார்த்தனை செய்வதாக அன்வார் தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்