Sep 12, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

Share:

சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான ஐடிஇ, மலேசியாவின் மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் அதிநவீன தொழில்நுட்ப பயிற்சி மையமான அட்டேக் ஜெடிஎம்முடன் தொழில்நுட்பக் கல்வி ஒத்துழைப்பு மற்றும் மாணவர் பரிமாற்றத் திட்டத்தை உருவாக்கும் முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், சிங்கப்பூர் ஐடிஇக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வப் பயணத்தின் போது இந்த முன்மொழிவை முன்வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

திவேட் எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சித் துறையில் அனைத்துலக அளவிலான வியூக ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் மனிதவள அமைச்சின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சிங்கப்பூர் ஐடியின் துணை தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கோ மோங் சோங் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்த போது, தொழில்நுட்ப மாணவர்களுக்கான பரிமாற்றத் திட்டம் குறித்து ரமணன் முன்மொழிந்தார். இதற்கு ஐடிஇ தரப்பில் நேர்மறையான வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், இரு தரப்பினரும் அடுத்தகட்டமாக ஒத்துழைப்பின் வடிவத்தை விரிவாக ஆராய உள்ளதாகவும் ரமணன் தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சந்திப்பில் ஐடிஇ கல்லூரியின் வணிகம் மற்றும் சேவைப் பள்ளி இயக்குநர் டான் வீ கியாங், அனைத்துலக அலுவலக உதவி இயக்குநர் ஜென் டான் மற்றும் அனைத்துலக அலுவலக மூத்த நிர்வாக அதிகாரி கேரல் லிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மாணவர் பரிமாற்றத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாக, அதன் செயல்முறை, ஒத்துழைப்பின் வரம்பு மற்றும் பிற விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் மனிதவள அமைச்சு அடுத்தகட்ட ஆலோசனைகளை மேற்கொள்ளும் என்றும் ரமணன் தெரிவித்துள்ளார்.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்