Oct 28, 2025
Thisaigal NewsYouTube
சுபாங்கில் பச்சிளம் குழந்தையை கைவிட்டுச் சென்ற நபரைத் தேடுகிறது போலீஸ்!
தற்போதைய செய்திகள்

சுபாங்கில் பச்சிளம் குழந்தையை கைவிட்டுச் சென்ற நபரைத் தேடுகிறது போலீஸ்!

Share:

சுபாங் ஜெயா, அக்டோபர்.28-

சுபாங் ஜெயாவில் நேற்று வீடு ஒன்றின் வெளியே, புதிதாகப் பிறந்த பச்சிளம் பெண் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்களிடமிருந்து காலை 10.27 மணிக்கு தகவல் கிடைத்ததாக சுபாங் ஜெயா காவல்துறைத் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்துள்ளார்.

நீலநிற பை ஒன்றில், தொப்புள் கொடியுடன் அப்பெண் குழந்தை உயிருடன் கண்டெடுக்கப்பட்டதாகவும், பரிசோதனைகளுக்காக ஷா ஆலம் மருத்துவமனைக்கு அக்குழந்தைக் கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், குழந்தை பிறப்பை மறைத்ததற்காக, குற்றவியல் சட்டப் பிரிவு 317 -இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் வான் அஸ்லான் தெரிவித்துள்ளார்.

Related News