ராணுவத்தில் பூமிபுத்ரா அல்லாதாவர்கள் அதிகளவில் சேர்க்கப்படுவர் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
ராணுவத்தில் சேர்வதற்கு பூமிபுத்ரா அல்லாதாவர்களை அதிகளவில் ஊக்குவிப்பதற்குப் பலதரப்பட்ட நடவடிக்கைகளை ராணுவப் படை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ராணுவத்தில், இந்தியர்கள், சீனர்கள் மற்றும் பூர்வ குடியினர் மிகக் குறைவாக இருப்பது, அவர்களிடம் நாட்டுப் பற்று இல்லை என்று பொருள்படாது. மாறாக, பொருளாதார மற்றும் வர்த்தகம் நலன் சார்ந்த தொழில்துறைகளில் அதிகளவில் பொருள் ஈட்ட முடியும் என்று உறுதியளிக்கப்படுவதால் அவர்கள் அத்துறைகளை நாடிச் செல்வதாக இன்று, மேலவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் முகமட் ஹசான் இதனை தெரிவித்தார்.
கடந்த மார்ச் 6 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், ராணுவத்தில் மலாய்காரர்களின் எண்ணிக்கை 85.8 விழுக்காடாகும். அதைத் தொடர்ந்து, சபா சரவாக் பூமிபுத்ராக்களின் எண்ணிக்கை 7.6 விழுக்காடாகும்.
தவிர, இந்தியர்களின் எண்ணிக்கை 1.4 விழுக்காடாக இருக்கும் அதே வேளையில், சீனர்களின் எண்ணிக்கை 0.5 விழுக்காடு என்றும் பூர்வ குடி மக்களின் எண்ணிக்கை 0.4 விழுக்காடு என்றும் அமைச்சர் முகமட் ஹசான் விளக்கினார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


