கோலாலம்பூர், ஆகஸ்ட்.03-
தனியார் கிளினிக்குகளில் மருந்து விலைகளை வெளிப்படையாக அறிவிக்கும் கட்டாய விதியின் கல்வி அடிப்படையிலான அமலாக்கம் மேலும் இரண்டு மாதங்களுக்கு, அதாவது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சும் உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 1 முதல் விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் முழுமையான அமலாக்கம் தொடங்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த விதிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், அது தொடர்ந்து அமலில் இருக்கும் என அமைச்சகங்கள் உறுதிப்படத் தெரிவித்துள்ளன.








