May 15, 2026
Thisaigal NewsYouTube
டாக்டர் சிந்துமதி மரண விசாரணை: வழக்கறிஞரை வெளியேற்றிய மரண விசாரணை நீதிபதி உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது
தற்போதைய செய்திகள்

டாக்டர் சிந்துமதி மரண விசாரணை: வழக்கறிஞரை வெளியேற்றிய மரண விசாரணை நீதிபதி உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது

Share:

டாக்டர் சிந்துமதி முத்துசாமியின் மரணம் குறித்த மரண விசாரணை நடைமுறையிலிருந்து வழக்கறிஞர் ஜைத் மாலிக்கை வெளியேற்ற மரண விசாரணை நீதிபதி பிறப்பித்த உத்தரவை ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.

மரண விசாரணை நீதிபதி ராசிஹா கசாலி, வழக்கறிஞர் ஜாயிட் மாலெக்கை வெளியேற்றிய நடவடிக்கை எவ்வித நியாயமான காரணமும் இன்றி எடுக்கப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்ற நீதிபதி நூர் ஹிஷாம் இஸ்மாயில் தீர்ப்பளித்தார். அத்துடன், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த மரண விசாரணையை, ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் ஆகஸ்ட் 17 முதல் 20ஆம் தேதி வரை தொடருமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் டாக்டர் சிந்துமதி சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி, அவரது குடும்பத்தினர் நீதி கேட்டு தொடர்ந்த வழக்கின் ஒரு பகுதியாக இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

Related News