Oct 17, 2026
Thisaigal NewsYouTube

சிருலை நாடு கடத்த அரை மணி நேரமே போதும்! – முன்னாள் சட்டத்துறை தலைவர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிருலை நாடு கடத்த அரை மணி நேரமே போதும்! – முன்னாள் சட்டத்துறை தலைவர்

மங்கோலியப் பெண் அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில் உண்மையை வெளிக்கொணர, குற்றவாளி சிருல் அஸார் உமாரை ஆஸ்திரேலியாவிலிருந்து மலேசியாவுக்குக் கொண்டுவர அரசாங்கம் துணிச்சலுடன் செயல்பட வேண்டும் என்று முன்னாள் சட்டத்துறை தலைவர் தோமி தோமஸ் வலியுறுத்தியுள்ளார்.

சிருலுக்குத் திரும்பியதும் மரண தண்டனை விதிக்கப்படாது என்று ஆஸ்திரேலியாவுக்கு மலேசியா உறுதியளித்தால், அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கையை அரை மணி நேரத்தில் தொடங்கிவிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அல் ஜஸீரா ஒளிபரப்பிய மர்டர் இன் மலேசியா-ஜஸ்திஸ் ஃபோர் அல்தான்துயா என்ற ஆவணப்படத்தில் பேசிய தோமி தோமஸ் மற்றும் அல்தான்துயா குடும்பத்தின் வழக்கறிஞர் சங்கீட் கவுர் டியோ ஆகியோர், சிருலும் அவரது கூட்டாளி அஸிலா ஹட்ரியும் அளித்த சட்டப்பூர்வ வாக்குமூலங்களில் உள்ள கூற்றுகள் விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

2006ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட அல்தான்துயா வழக்கில் இன்னும் விடை கிடைக்காத கேள்விகள் இருப்பதாகவும், சிருலின் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மையா என்பதை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கிள்ளான் பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளம்! பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

கிள்ளான் பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளம்! பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

தண்ணீர் கலந்ததாகப் புகார்! சிலாங்கூரில் 10 புகார்கள் குறித்து விசாரணை

தண்ணீர் கலந்ததாகப் புகார்! சிலாங்கூரில் 10 புகார்கள் குறித்து விசாரணை

மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு நீண்டகாலப் பலன் அளிக்கும் திட்டங்கள் அவசியம்

மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு நீண்டகாலப் பலன் அளிக்கும் திட்டங்கள் அவசியம்

15 வயதுக்குட்பட்டோரிடம் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு – தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்

15 வயதுக்குட்பட்டோரிடம் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு – தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்

சுங்கை பூலோவில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ரமணன் நம்பிக்கை – இறுதி முடிவை மக்கள் எடுப்பார்கள்

சுங்கை பூலோவில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ரமணன் நம்பிக்கை – இறுதி முடிவை மக்கள் எடுப்பார்கள்

பினாங்கில் மின்சாரப் பேருந்து சேவை தொடக்கம் – வெளிநாட்டினருக்குப் பொதுப் போக்குவரத்தில் தடை விதிக்க முடியாது

பினாங்கில் மின்சாரப் பேருந்து சேவை தொடக்கம் – வெளிநாட்டினருக்குப் பொதுப் போக்குவரத்தில் தடை விதிக்க முடியாது