Oct 17, 2026
Thisaigal NewsYouTube

மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு நீண்டகாலப் பலன் அளிக்கும் திட்டங்கள் அவசியம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு நீண்டகாலப் பலன் அளிக்கும் திட்டங்கள் அவசியம்

மக்களின் பொருளாதாரம், வேலை வாய்ப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் திட்டங்கள் நீண்டகாலப் பலன்களை அளிக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்தியுள்ளார்.

தமது சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில், கோத்தா டாமான்சாரா, செக்‌ஷன் 7 பல்நோக்கு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற மடானி கீத்தா நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் மடானி கீத்தா நிகழ்ச்சிகள், மக்களுக்கு அரசாங்கம் செயல்படுத்தி வரும் திட்டங்களைத் தெளிவாக எடுத்துரைப்பதுடன், அவற்றின் பலன்களை அவர்கள் நேரடியாகப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்குவதாக டத்தோ ஸ்ரீ ரமணன் விவரித்தார்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் வெவ்வேறு அரசு அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படுவதால், உள்ளூர் மக்களுக்கும் சில நேரங்களில் தொகுதி சேவை மையத்துக்கும்கூட அவற்றைப் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைப்பதில்லை என்று டத்தோ ஸ்ரீ ரமணன் சுட்டிக் காட்டினார்.

எனவே, பல்வேறு அரசு அமைப்புகளை ஒரே இடத்தில் ஒன்றிணைத்து நடத்தப்படும் இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம், மக்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்குவதுடன், அவர்கள் நீடித்த பலன்களைப் பெறுவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கிள்ளான் பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளம்! பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

கிள்ளான் பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளம்! பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

தண்ணீர் கலந்ததாகப் புகார்! சிலாங்கூரில் 10 புகார்கள் குறித்து விசாரணை

தண்ணீர் கலந்ததாகப் புகார்! சிலாங்கூரில் 10 புகார்கள் குறித்து விசாரணை

சிருலை நாடு கடத்த அரை மணி நேரமே போதும்! – முன்னாள் சட்டத்துறை தலைவர்

சிருலை நாடு கடத்த அரை மணி நேரமே போதும்! – முன்னாள் சட்டத்துறை தலைவர்

15 வயதுக்குட்பட்டோரிடம் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு – தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்

15 வயதுக்குட்பட்டோரிடம் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு – தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்

சுங்கை பூலோவில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ரமணன் நம்பிக்கை – இறுதி முடிவை மக்கள் எடுப்பார்கள்

சுங்கை பூலோவில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ரமணன் நம்பிக்கை – இறுதி முடிவை மக்கள் எடுப்பார்கள்

பினாங்கில் மின்சாரப் பேருந்து சேவை தொடக்கம் – வெளிநாட்டினருக்குப் பொதுப் போக்குவரத்தில் தடை விதிக்க முடியாது

பினாங்கில் மின்சாரப் பேருந்து சேவை தொடக்கம் – வெளிநாட்டினருக்குப் பொதுப் போக்குவரத்தில் தடை விதிக்க முடியாது