Oct 16, 2026
Thisaigal NewsYouTube

காவல்துறை சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உள் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
காவல்துறை சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உள் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது

டிச. 15-

கோலாலம்பூரில் ஒரு பெண் மீது காவல்துறை அதிகாரி ஒருவர் அநாகரிக – ஆபாச சைகை காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் தொடர்பான காணொலி ஒன்று பரவியதை அடுத்து, காவல்துறை சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உள் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அளித்த கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் Datuk Rusdi Mohd Isa குறிப்பிடுகயில், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர் தற்போது Kuala Lumpur பகுதியில் பணியாற்றுவதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக எந்தவொரு புகாரும் பெறப்படவில்லை என்றாலும், விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக, பாதிக்கப்பட்டப் பெண், மனித உரிமைகள் தொடர்பான போராட்டத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது, அந்தக் காவல்துறை அதிகாரி தன்னை நோக்கி பலமுறை அநாகரிக – ஆபாச சைகை காட்டியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →