Sep 22, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அச்சத்தை ஏற்படுத்துகிறது
தற்போதைய செய்திகள்

மாணவர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அச்சத்தை ஏற்படுத்துகிறது

Share:

மாணவர்கள் மத்தியில் அதிகரித்துவரும் புகைப்பிடிக்கும் பழக்கம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று சுகாதார துணை அமைச்சர் லுகனீஸ்மா அவாங் சௌனி தெரிவித்தார்.


இதன் தொடர்பில், இளம் வயதுடையவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் குறைப்பதற்கு gegar -18 என்ற புகைப்பிடிக்கும் எதிர்ப்பு பிரச்சாரத் திட்டத்க்ச் சுகாதரா அமைச்சு தொடரவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.


கடந்த ஆண்டு சுமார் 13 லட்சம் பேரிடம் இத்தகைய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் 43 ஆயிரத்து 19 பேர் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளதாக இன்று மேலவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில் லுகனீஸ்மா இதனைக் குறிப்பிட்டார்.

Related News