Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சட்டவிரோத தங்க சுரங்க நடவடிக்கை  ஆடவருக்கு 50 ஆயிரம் வெள்ளி அபராதம்
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத தங்க சுரங்க நடவடிக்கை ஆடவருக்கு 50 ஆயிரம் வெள்ளி அபராதம்

Share:

பகாங், லிபிஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள கெச்சௌ பாதுகாக்கப்பட்ட வணப் பகுதியில் சட்டத்திற்குப் புறம்பான முறையில் தங்கத்தை தோண்டி எடுத்தக் குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு இங்குள்ள செஷன் நீதிமன்றம் 50 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் இந்தக் குற்றத்தைப் புரிந்ததை ஒப்புக் கொண்ட 59 வயது லியு லொக் ஷொங் , அபராதத்தைச் செலுத்தத் தவறினால், 12 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி அஹ்மாட் ஃபைசாட் யஹாயா தீர்ப்பளித்தார்.

எந்தவிதமான அரசு அனுமதியும் இன்றி தங்கத்தைத் தோண்டிய லொக் ஷொங்கிற்கு மாத வருமானம் 3 ஆயிரத்து 500 வெள்ளி என்பதால் குறைந்தபட்ச்ச தண்டனையைத் தமக்குக் கொடுக்குமாறு நீதிமன்றத்தில் கோரினார்.

ஆனால், இந்த சட்டவிரோத நடவடிக்கையால் மாநிலத்தின் வருவாய்க்குப் பாதகம் விளைவித்ததோடு சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தி இருப்பதால் தக்க தண்டனையை கொடுக்க வேண்டும் என பகாங் மாநில அமலாக்கப் பிரிவின் சட்ட அதிகாரி தக்கியுடின் அசிசான் கேட்டுக் கொண்டார்.

Related News