Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இந்தோனேசியப் பெண் கடத்தல், ஒன்பது பேர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இந்தோனேசியப் பெண் கடத்தல், ஒன்பது பேர் மீது குற்றச்சாட்டு

Share:

இந்தோனேசிய மாதுவை பிணைப்பணம் கோரி கடத்திச் சென்றதாக ஒன்பது ஆடவர்கள், பினாங்கு, ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

சி. யோகநாதன் உட்பட 29 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த ஒன்பது பேரும் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி காலை 7 மணியளவில் ஜார்ஜ்டவுன், பாயா டெருபோங், பங்சாபுரி ஸ்ரீ அமன் என்ற இடத்தில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் 36 வயது இந்தோனேசிய மாதுவை கடத்திவைத்துக் கொண்டு 5 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியை பிணைப்பணமாக கோரியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் ஒன்பது பேரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

Related News