இந்தியா பாய்ச்சிய சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நேற்று வெற்றிகரமாக நிலவில் கால்பதித்து சாதனைப்படைத்து இருப்பது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
இந்த சாதனையின் மூலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்து இருப்பது மகத்தான சாதனையாகும் என்று அன்வார் புகழ்ந்துரைத்துள்ளார்.
இதுவரையில் யாருமே சாதிக்காத ஒன்றை இந்தியா சாதித்து இருப்பது குறித்து மலேசியா பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்ட அன்வார், இது ஆசியாவின் வெற்றி என்று வர்ணித்துள்ளார்.
சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் இந்திய நேரப்படி நேற்று மாலை 6.044 மணியளவில் நிலவைத் தொட்டது. அதன்பின் அங்குலம் அங்குலமாக லேண்டரில் இருந்து அடியெடுத்து வைத்து சுமார் 6 மணி நேரம் கழித்து நிலவில் பிரக்யான் ரோவர் கால்பதித்தது.
கடந்த ஜுலை 14 ஆம் தேதி சந்திரயான் -3 விண்கலத்தை இந்தியா பாய்ச்சியது. ஒரு மாத பயணத்திற்கு பின்னர் அது நிலவின் சுற்றுப் பாதையை அடைந்தது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


