Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய ஏர்லைன்ஸ் உறுதிப்படுத்தியது
தற்போதைய செய்திகள்

மலேசிய ஏர்லைன்ஸ் உறுதிப்படுத்தியது

Share:

மலேசிய ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 737-800 ரக விமானம், 131 பயணிகளுடன் இந்தியாவில் ஹைதராபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியதை அந்த தேசிய விமான நிறுவனம் இன்று மாலையில் உறுதிப்படுத்தியுள்ளது.

Hyderabad- ராஜீவ் காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கி, அனைத்து பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மலேசிய ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

MH 199 விமானத்தில் பயணித்த அனைத்துப் பயணிகளும் ஹைதராபாத்- தில் தங்க வைக்கப்பட்டு, வேறு விமானத்தில் மூலம் கோலாலம்பூருக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

இன்று அதிகாலை 3.21 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்திற்கு பின்னணியில் உள்ள காரணங்களை மலேசிய ஏர்லைன்ஸ் விளக்கவில்லை. இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி விமானத்தின் இயந்திரத்தில் தீப்பொறிகள் கிளம்பியதாக தெரிவித்துள்ளன.

Hyderabad-திலிருந்து கோலாலம்பூரை நோக்கி வந்து கொண்டு இருந்த அந்த போயிங் விமானம், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மறுபடியும் Hyderabad- திற்கு திருப்பி விடப்பட்டதாக மலேசிய ஏர்லைன்ஸ் விளக்கம் அளித்துள்ளது.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்