கோலாலம்பூர், செப்டம்பர்.09-
சரவாக், பிந்துலுவிலுள்ள எல்என்ஜி இயற்கை எரிவாயு உற்பத்திக் கூடத்திற்கு, எஸ்எம்எஸ் மூலமாக மிரட்டல் விடுத்த நபரை காவல்துறை தேடி வருகின்றது.
இது குறித்து புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் கூறுகையில், சம்பந்தப்பட்ட நபரைத் தேடி வருகின்றோம், விரைவில் அந்நபரை அடையாளம் காண்போம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இம்மிரட்டலையடுத்து, எல்என்ஜி இயற்கை எரிவாயு உற்பத்திக் கூடத்திற்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








