பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்.19-
மாணவர்கள் மத்தியில் அபாயகரமாக அதிகரித்து வரும் வன்முறைச் செயல்கள், சமூக - உளவியல் நிலையிலான பெரிய பிரச்சினைகளின் வெளிப்பாடு என்று மலேசிய மருத்துவச் சங்கம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. அண்மையில் நடந்த கத்திக் குத்து, கூட்டுப் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய பள்ளிச் சூழலில் வன்முறை ஊடுருவியுள்ளதன் சோகமான எடுத்துக்காட்டுகள் என்று அச்சங்கத் தலைவர் டாக்டர் திருநாவுக்கரசு ராஜூ சுட்டிக் காடடினார். கல்வியின் அழுத்தத்தாலும் சமூக ஊடகங்களின் ஆபத்தான தாக்கத்தாலும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துப் பேசிய அவர், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கவனமாகப் பின்தொடர்ந்து, விசித்திரமான நடத்தைகளை உணர்ந்தால் உடனடியாக மனநல ஆலோசனை, சிகிச்சை போன்ற உதவியைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.