மலேசியாவின் அடையாளமாக திகழும் ஒற்றைக் கோபுரத்தின் நிர்வாகத்தை மிக விரைவாக கைப்பற்றுவதற்காகவும் அதன் செயல்முறைகளை விரிவுப்படுத்துவதற்காகவும் முன்னாள் தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சரான டான் ஶ்ரீ அனுவார் மூசாவிற்க்கு வருடத்திற்கு 5 லட்சம் வெள்ளி என 15 வருடத்திற்கு லஞ்சம் தருவதாக கூறிய குற்றத்திற்காக
ஹைட்ரோஷாப் எஸ்.டி.ன். பி.எச்.டி நிறுவனத்தின் இயக்குனர் டத்தோ அப்துல் ஹமிட் ஷேக் அப்துல் ரசாக் மீது இன்று நீதிமன்றத்தில் குற்ற அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
49 வயதான அந்த இயக்குனர் தனது தவற்றை நீதிபதியின் முன் ஒப்புக் கொள்ளாமல் நீதிமன்ற விசாரணைக் கோரி மனு செய்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் நாள் அன்று ஊழல் தடுப்பு வாரியம் நடத்திய விசாரணையில் ஒற்றைக் கோபுரத்தின் பங்குகள் வாங்கப்பட்டிருப்பதஹகவும் நிர்வாகத்தைக் கைப்பற்றுவதற்கான விரைவு நடவடிக்கைகாக லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


