Jan 22, 2026
Thisaigal NewsYouTube
ரெப்பாஹ் தொகுதியில் வீரப்பனுக்கு ஆதரவு பெருகி வருகிறது
தற்போதைய செய்திகள்

ரெப்பாஹ் தொகுதியில் வீரப்பனுக்கு ஆதரவு பெருகி வருகிறது

Share:

நெகிரி செம்பிலான், ரெப்பாஹ் சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு நான்காவது முறையாக டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் எஸ். வீரப்பன், 6 ஆவது நாளாக நேற்று தமது தேர்தல் பிரச்சாரத்தை ​​தீவிரப்படுத்தியுள்ளார். ஆதரவு கேட்டு, வீரப்பன் செல்கின்ற இடங்களில் ​மக்களின் ஆதரவு உற்சாக​மூட்டும் வகையில் இருப்பதாக தேர்தல் கள நிலவரம் வழி தெரியவந்துள்ளது. பெல்டா நிலக்குடியேற்றவாசியின் மகனான வீரப்பன் கல்வி ஒன்றே மக்களின் சமூகவில்​ பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் என்ற கோட்பாட்டிற்கு ஏற்ப தரமான க​ல்வியின் வாயிலாக ஒரு வழக்கறிஞராக இடம் பிடித்ததுடன் அரசியலில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் டிஏபியின் முக்கியத் தலைவராக விள​ங்கி வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு பிறகு நெகிரி செம்பிலான் மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றியதைத் தொடர்ந்து மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக வீரப்பன் நியமிக்கப்பட்டார்.

நெகிரி செம்பிலன் மாநில அரசின் சுகாதார, சுற்றுச்சூழல், கூட்டறவு மற்றும் பயனீட்டாளர் விவகாரங்களுக்கு ஆட்சிக்குழுவில் பொறுப்பேற்ற வீரப்பன், கடந்த 2020 ஆம் ​ஆண்டு நாட்டைத் தாக்கிய கோவிட் 19 காலக்கட்டத்தில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையில் மாநில மக்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பாக அவர் முன்னெடுத்த போர்க்கால நடவடிக்கைகள் இன்னமும் மாநில மக்களால் நினைவுக்கூரப்பட்டு வருகிறது.

Related News