Sep 9, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் இந்திய சமூகத்தினருக்கு அரசுப் பணிக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் இந்திய சமூகத்தினருக்கு அரசுப் பணிக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி

Share:

சிலாங்கூர் மாநில இந்திய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பட்டதாரிகள் மற்றும் வேலை தேடுவோர் மலேசிய அரசாங்கப் பணிகளில் உள்ள வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் வேலை வாய்ப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இமயம் (IMAIYAM) எனப்படும் புத்ராஜெயா இந்திய அரசு ஊழியர்கள் சங்கம், பூச்சோங் நாடாளுமன்ற அலுவலகம் மற்றும் ஶ்ரீ கெம்பாங்கான் சட்டமன்ற அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யும் இந்த நிகழ்ச்சியானது, வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, டேவான் செர்பாகுனா எம்பிஎஸ்ஜே, ஜாலான் பெசார், ஶ்ரீ கெம்பாங்கானில் நடைபெறவுள்ளது.

இதில் அரசாங்கப் பணிகளுக்கான தகுதிகள், விண்ணப்ப நடைமுறைகள், தேர்வு செயல்முறை மற்றும் நேர்முகத் தேர்வுக்கான தயாரிப்புகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளது.

மேலும், பல்வேறு அரசாங்கத் துறைகளின் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அரங்குகளும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி முற்றிலும் இலவசம்.

Related News

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற துணைப் பிரதமர் ஃபாடில்லா யுசோஃப்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற துணைப் பிரதமர் ஃபாடில்லா யுசோஃப்

துவாங்கு முஹ்ரிஸுக்கு எதிரான பிரகடனத்தில் வற்புறுத்தலின் பேரில் கையெழுத்திட்டேன்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் போலீசில் புகார்

துவாங்கு முஹ்ரிஸுக்கு எதிரான பிரகடனத்தில் வற்புறுத்தலின் பேரில் கையெழுத்திட்டேன்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் போலீசில் புகார்

புத்ராஜெயா அடுக்குமாடிக் குடியிருப்பில் குடிநுழைவுத் துறை அதிரடி சோதனை: 325 வெளிநாட்டவர்கள் கைது

புத்ராஜெயா அடுக்குமாடிக் குடியிருப்பில் குடிநுழைவுத் துறை அதிரடி சோதனை: 325 வெளிநாட்டவர்கள் கைது

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்க உதவி - அன்வார் உறுதி

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்க உதவி - அன்வார் உறுதி

விமானத்தில் போதைப் பொருள் கடத்திய வழக்கு: மேலும் ஒரு மலேசிய விமானி கைது

விமானத்தில் போதைப் பொருள் கடத்திய வழக்கு: மேலும் ஒரு மலேசிய விமானி கைது

சரவாக்கில் ஹெலிகாப்டர் மருத்துவச் சேவை தொடரும் - அமைச்சர் சுல்கிஃப்ளி தகவல்

சரவாக்கில் ஹெலிகாப்டர் மருத்துவச் சேவை தொடரும் - அமைச்சர் சுல்கிஃப்ளி தகவல்