இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவ விடுப்பில் இருந்த துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யுசோஃப், இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நேரில் பங்கேற்றார்.
எனினும், தேசிய இருதய கழகமான ஐஜேஎன் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைப்படி, செப்டம்பர் 27-ஆம் தேதி வரை மருத்துவ விடுப்பில் தொடரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் பங்கேற்றது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறிய ஃபாடில்லா, சிகிச்சை காலத்தில் தமக்கு ஆதரவாக பிரார்த்தனையும், அக்கறையும் காட்டிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பெட்ரா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினரான ஃபாடில்லா, கடந்த ஜூலை 28-ஆம் தேதி ஐஜேஎன்னில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 12-ஆம் தேதி இதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








