பட்டர்வொர்த், ஆகஸ்ட்.07-
பட்டர்வொர்த், ஜாலான் பாகான் லூவாரில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தில் இன்று அதிகாலையில் குடிநுழைவுத் துறையினர் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் 35 பெண்கள் உட்பட 37 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் ஜிஆர்ஓ உபசரணைப் பணிப்பெண்கள் உட்பட பயண ஆவணமில்லாத 37 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறையின் பினாங்கு மாநில இயக்குநர் பஸ்ரி ஒத்மான் தெரிவித்தார்.
அதிகாலை ஒரு மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில் அந்த கேளிக்கை மையத்தில் இருந்த 110 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பிடிபட்ட 35 அந்நியப் பெண்களில் 19 பேர் வியட்நாம் பிரஜைகளாவர். 14 பேர் தாய்லாந்து பிரஜைகளாவர். எஞ்சியவர்கள் சீனா, லாலோஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று பஸ்ரி ஒத்மான் விவரித்தார்.








