கோலாலம்பூர், செப்டம்பர்.19-
ஜேகேஆர் எனப்படும் பொதுப்பணி இலாகாவினால் கண்காணிக்கப்பட்டு வரும் நாடு முழுவதும் உள்ள மொத்தம் 34 ஆயிரத்து 400 மலைச்சாரல்களில், ஆயிரத்து 97 மலைச்சாரல்கள் ஆபத்து நிறைந்தவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.
சபாவில் 4 ஆயிரத்து 178, சரவாக்கில் 2 ஆயிரத்து 686 மற்றும் லாபுவானில் 181 மலைச்சாரல்களைத் தவிர, தீபகற்ப மலேசியாவில் மொத்தம் 27 ஆயிரத்து 72 மலைச்சாரல்கள் இதில் அடங்கும் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலேக்ஸண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
ஆபத்து நிறைந்த மலைச்சாரல்கள் குறித்து பொதுப்பணி இலாகா பல்வேறு மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது. இவற்றில் எந்த நேரத்திலும் சரிந்து விழலாம் என்ற மதிப்பீடுகளைக் கொண்ட மலைச்சாரல்களும் அடங்கும் என்று 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு பொதுப்பணி இலாகா முன்னெடுத்து வரும் ஆயத்த நடவடிக்கைகள் பற்றிய விளக்கமளிப்புக் கூட்டத்தில் அமைச்சர் அலேக்ஸண்டர் நந்தா லிங்கி இதனைத் தெரிவித்தார்.








