கோலாலம்பூர், நவம்பர்.14-
கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவாகியுள்ள, 18 வயதிற்குட்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட 3093 பாலியல் குற்ற வழக்குகளில், 608 வழக்குகள் பள்ளி வளாகங்களில் நடந்தவையாகும்.
கடந்த 2023-ஆம் ஆண்டில் 1,760 வழக்குகளும், 2024-ஆம் ஆண்டில் 1,041 வழக்குகளும், இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில் 892 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக சட்டச் சீர்த்திருங்களுக்கான துணையமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் 2023-ஆம் ஆண்டு முதல் 2025 அக்டோபர் மாதம் வரையில், மொத்தம் 3.601 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் குலசேகரன் தெரிவித்தார்.
இப்பிரச்சினையைத் தீர்க்க, பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு சீர்திருத்தக் குழு ஒன்றையும் கல்வியமைச்சு நிறுவியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அக்குழுவில் கல்விமான்கள், போலீஸ் அதிகாரிகள், பிரதமர் துறை அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.








