பெரா, ஜூலை.14-
பகாங், பெரா, ஃபெல்டா புக்கிட் மெண்டியில் ஒரு புதருக்குள் கடந்த மே மாதம் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடு, கடந்த ஆண்டு மே மாதம் காணாமல் போன 49 வயது நபருடையது என்பது உறுதிச் செய்யப்பட்டது.
ஃபெல்டா நிலத் திட்டம் நடவடிக்கையில் ஈடுபட்ட அந்த நபர் திடீரென்று காணாமல் போனதாகப் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை செய்ததிலும், கண்டெக்கப்பட்ட எலும்புக்கூட்டை டிஎன்ஏ மரபணு சோதனைக்கு உட்படுத்தியதிலும் அது காணாமல் போன நபருடையது என்பது 99 விழுக்காடு உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக பெரா மாவட்ட போலீஸ் தலைவர் ஸுல்கிஃப்லி நஸீர் தெரிவித்தார்.








