Oct 21, 2026
Thisaigal NewsYouTube

தாமான் முலியா மக்கள் குடியிருப்பை மேம்படுத்த ரிம6.67 மில்லியன் செலவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தாமான் முலியா மக்கள் குடியிருப்பை மேம்படுத்த ரிம6.67 மில்லியன் செலவு

கோலாலம்பூர், பண்டார் துன் ரசாக்கில் உள்ள தாமான் முலியா மக்கள் குடியிருப்பில், 6.67 மில்லியன் ரிங்கிட் செலவில் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

கட்டடங்களுக்கு வண்ணம் பூசுதல், மின்சாரக் கம்பிகள் மற்றும் பிரதான மின்பகிர்வு வாரியங்களை மாற்றுதல், சாலைகளைச் சீரமைத்தல், தீத்தடுப்பு அமைப்புகளை நிறுவுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக, கூட்டரசுப் பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.

தாமான் முலியா மக்கள் குடியிருப்பின் பிளாக் B-யில் இன்று நடைபெற்ற கள ஆய்வின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கிடையில், தலைநகரில் உள்ள அனைத்து மக்கள் குடியிருப்புகளிலும் மின்சாரப் பாதுகாப்புத் தணிக்கை மேற்கொள்ள, கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் திட்டமிட்டுள்ளதாக ஹன்னா இயோ குறிப்பிட்டார்.

இவ்வாண்டு 64 மக்கள் குடியிருப்புகள் மற்றும் பொது வீடமைப்புப் பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றில் 70 முதல் 80 விழுக்காட்டுப் பணிகளை டிசம்பர் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகள், பொது வீடமைப்புகள் மற்றும் வணிகத் தளங்களின் மேம்பாட்டுக்காக டிபிகேஎல் மொத்தம் 446 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது என்று ஹன்னா இயோ தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →