Oct 21, 2026
Thisaigal NewsYouTube

வேஸ் செயலிக்கு ஏன் தடை? பிரதமர் அன்வார் விளக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வேஸ் செயலிக்கு ஏன் தடை? பிரதமர் அன்வார் விளக்கம்

அரசாங்கத்தின் முக்கியத் தகவல்களும் பொதுமக்களின் தனிப்பட்ட தரவுகளும் இஸ்ரேலால் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதால், அரசு ஊழியர்கள் வேஸ் வழிகாட்டிச் செயலியைப் பயன்படுத்த மலேசிய அரசு தடை விதித்துள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கமளித்துள்ளார்.

இஸ்ரேல் சட்டத்தின் கீழ் செயல்படும் வேஸ் மோபைல் லிமிடட் நிறுவனம், பயனர்களின் தரவுகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற தேசிய இணையப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு, உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்குப் பதிலாக, மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் உருவாக்கியுள்ள உள்ளூர் வழிகாட்டிச் செயலியான தூஜூவைப் (TuJu) பயன்படுத்துமாறு பிரதமர் பொதுமக்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில், வேஸ் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டால், அரசு ஊழியர்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் ஏன் தடை விதிக்கப்படவில்லை என பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அஃப்னான் ஹாமிமி தையிப் அஸாமுடின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
70 ஆண்டுகால காத்திருப்புக்கு தீர்வு: பிறை கம்போங் மானிஸ் மறுமேம்பாட்டுத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது

70 ஆண்டுகால காத்திருப்புக்கு தீர்வு: பிறை கம்போங் மானிஸ் மறுமேம்பாட்டுத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது

கிள்ளான்  மருத்துவமனையில் கூரை இடிந்து விழுந்தது; நோயாளிகள், ஊழியர்கள் பாதிக்கப்படவில்லை

கிள்ளான் மருத்துவமனையில் கூரை இடிந்து விழுந்தது; நோயாளிகள், ஊழியர்கள் பாதிக்கப்படவில்லை

கோலாலம்பூர் விமான நிலையத்தில் 26ஆம் தேதி முதல் மோப்ப நாய்கள் சோதனை

கோலாலம்பூர் விமான நிலையத்தில் 26ஆம் தேதி முதல் மோப்ப நாய்கள் சோதனை

புகைமூட்டம்: 7 மாநிலங்கள், கோலாலம்பூர், புத்ராஜெயா பள்ளிகள் நாளை வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: 7 மாநிலங்கள், கோலாலம்பூர், புத்ராஜெயா பள்ளிகள் நாளை வழக்கம்போல் இயங்கும்

பள்ளிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடைமுறைகளை மறுஆய்வு செய்ய வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

பள்ளிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடைமுறைகளை மறுஆய்வு செய்ய வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

ஷுஹைலி மீதான புகார்: புக்கிட் அமானில் விசாரணை

ஷுஹைலி மீதான புகார்: புக்கிட் அமானில் விசாரணை