கோலாலம்பூர், அக்டோபர்.16-
சிலாங்கூர் தெலுக் பங்ளிமா காராங்கில் நேற்று ஏற்பட்ட புயல் காரணமாக, 4 பள்ளிகள் சேதமடைந்ததையடுத்து, வீட்டிலிருந்தே கற்றல் முறையில் வகுப்புகள் நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சகத்தின் தகவல்படி, புயலால் எஸ்எம்கே சிஜாங்காங் ஜெயா, எஸ்கே சிஜாங்காங் ஜெயா, எஸ்கே கம்போங் மேடான், மற்றும் எஸ்கே ஜாலான் தஞ்சோங் ஆகியவை புயலால் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் தற்போது பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சு இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதே வேளையில், எதிர்பாராத வானிலை மாற்றங்களால் ஏற்படும் சேதங்களையும், கல்வி தடைகளையும் எதிர்கொள்ளும் வகையில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறும் கல்வி நிலையங்களை அறிவுறுத்தியுள்ளது.








