கோலாலம்பூர், ஆகஸ்ட்.08-
கோலாலம்பூர், பந்தாய் டாலாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 கடை வீடுகள் அழிந்தன. இச்சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் நிகழ்ந்தது. இத்தீச் சம்பவம் குறித்து இரவு 11.11 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்பு நடவடிக்கை மையம் தெரிவித்தது.
ஹாங் துவா நிலையம், ஹர்தாமாஸ் நிலையம் ஆகியவற்றின் உதவியுடன் பந்தாய் டாலாம் தீயணைப்பு நிலையத்தார், சம்பவ இடத்திற்கு விரைந்து, கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைத்ததாக அந்த மையத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இத்தீ விபத்தில் ஒரே வரிசையில் இருந்த மைடின் மார்ட் கடை உட்பட நான்கு கடைகளும், அதனையொட்டிய புறம்போக்கு வீடுகளும் தீயில் அழிந்தன.
இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிருடற் சேதம் எதுவும் நிகழவில்லை. தீ விபத்திற்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாக அப்பேச்சாளர் மேலும் கூறினார்.








