Oct 16, 2026
Thisaigal NewsYouTube

முதல் நாளிலேயே 21 லட்சம் வெள்ளி வசூலானது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முதல் நாளிலேயே 21 லட்சம் வெள்ளி வசூலானது

கோலாலம்பூர், நவ. 23-


மடானி அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தையொட்டி போக்குவரத்து சம்மன்களுக்கு 60 விழுக்காடு வரை கட்டண கழிவு வழங்கும் திட்டத்தில் நேற்று முதல் நாளிலேயே 21 லட்சம் வெள்ளி வசூலாகியுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்துப்பிரிவு இயக்குநர் Datuk Seri Mohd Yusri Hassan Basri தெரிவித்தார்.

இதன் வாயிலாக மக்கள் மொத்தம் 24 ஆயிரத்து 400 போக்குவரத்து சம்மன்களுக்கு தீர்வு கண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த 60 விழுக்காடு கட்டண சலுகையை பெறுவதற்கு MyBayar PDRM அகப்பக்கத்தின் வாயிலாகவும் சம்மன்களுக்கு தீர்வு காணலாம் என்று அவர் ஆலோசனைக்கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →