பினாங்கு, ஜார்ஜ்டவுன், ஜாலான் பேராக்கில் உள்ள கடை வீடுகள் வரிசை ஒன்று தீப்பற்றிக்கொண்டதில் இரண்டு மாடிகளை கொண்ட நான்கு கடை வீடுகள் அழிந்தன. இந்த சம்பவம் நேற்று இரவு 10.33 மணியளவில் நிகழ்ந்தது. ஒரு மோட்டார் சைக்கிள் பட்டறை, ஒரு கிடங்கு, சாவி செய்யும் கடை மற்றும் ஒரு காலி வீடு ஆகியவை தீயில் அழிந்ததாக பினாங்கு தீயணைப்புக்கு செயலாக்க அதிகாரி முகமது ஃபதில் உமர் தெரிவித்தார்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு முதலாவதாக விரைந்த ஜாலான் பேரா தீயணைப்பு நிலைய வீரர்கள் முழு வீச்சில் தீயை ணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் மற்ற நிலையங்களைச் சேர்ந்த வீரர்களும் அவ்விடத்திற்கு விரைந்து, தீ மற்ற கடை வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர். தீ ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்ற அவர் குறிப்பிட்டார்.








