லெபனான் நாட்டைச் சேர்ந்த மொத்த நகை வியாபாரி தமக்கு அனுப்பிய கோடிக்கணக்கான வெள்ளி மதிப்புள்ள 43 நகைகள் காணாமல் போனதற்குத் தாம் பொறுப்பேற்க முடியாது என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
போலீசார் அல்லது மலேசிய அரசாங்கத்தின் சட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்கப்பட் நகைகளில் காணாமல் போனதாகக் கூறப்படும் 43 நகைகளின் ஒன்று அவர்களிடம் இருப்பதன் அடிப்படையில், அந்த நகைகள் போலீசார் இருக்கின்றன என்பது நம்பகத்தன்மைக்கு உட்பட்டதாக இருக்கிறது என்று ரோஸ்மா தமது சத்தியப்பிரமாண வாக்குமூலம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த நகைகள் காணாமல் போனதற்கு தாம் காரணமல்ல. அந்த நகைகள் அனைத்தையும் தாம் ஒரே இடத்தில் வைத்திருந்தாகவும், அவற்றை போலீசார் பறிமுதல் செய்து உடன் கொண்டுச் சென்றனர் என்றும் ரோஸ்மா குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, கோடிக்கணக்கான வெள்ளி மதிப்புள்ள அந்த நகைகளை தாம் வைத்திருப்பதற்கான சாத்தியம் இல்லை என்று ரோஸ்மா தமது ம னுவில் தெரிவித்துள்ளார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


