நாடு முழுவதும் உள்ள பி.பி.ஆர் அடுக்குமாடி பொது குடியிருப்பு ப்பகுதிகளில் உடல் உபாதைகளுக்கான மருந்துப் பொருட்களை சுயசேவை கியோஸ் இயந்திரங்களின் வாயிலாக மக்கள் பெற்றுக்கொள்வதற்கான திட்டத்தை அரசாங்கம் கொண்டுள்ளதாக ஊராட்சிமன்ற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
இரவு வேளைகளில் ஆபத்து அவசர தருணங்களில் இந்த கியோஸ் இயந்திரங்களின் வாயிலாக மருந்துப் பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதற்கு ஊராட்சிமன்ற மேம்பாட்டுத்துறை அமைச்சும், சுகாதார அமைச்சும் இணைந்து மருந்துப் பொருட்களுக்கான முகப்பிடங்களை உருவாக்குவதற்கு உத்தேசித்துள்ளதாக ஙா கோர் மிங் குறிப்பிட்டார்.
நள்ளிரவு வேளைகளில் பிள்ளைகள் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் மக்கள் மருந்தகங்களுக்கு சென்று மருந்துப் பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மாறாக, பி.பி.ஆர் குடியிருப்புப்பகுதிகளில் 24 மணி நேரமும் செயல்படும் சுயசேவை கியோஸ் இயந்திரங்களின் வாயிலாக மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று ஙா கோர் மிங் தெரிவித்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


