Jul 31, 2026
Thisaigal NewsYouTube
பேங்க் ராக்யாட்டின் 69வது ஆண்டு விழா
தற்போதைய செய்திகள்

பேங்க் ராக்யாட்டின் 69வது ஆண்டு விழா

Share:

நேற்று பேங்க் ராக்யாட் வங்கியின் 69வது ஆண்டு நிறைவு நாளை ஒட்டி சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவில் தொழில் முனைவோர் மேம்பாடு. கூட்டுறவு அமைச்சர் டத்தோ இவோன் பெனடிக், துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, அமைச்சின் நிர்வாக ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இவ்விழாவில் பேங்க் ராக்கெட் தலைமை செயல்முறை அதிகாரி, நாடளவில் இருக்கும் வங்கி கிளையின் முக்கிய அலுவலர்களும், பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அதிர்ஷ்ட குலுக்கில் முதல் பரிசாக உம்ராவிற்கு செல்ல இரண்டு நபர்களுக்கு பயண ஏற்பாடும், இரண்டாவது பரிசாக யமஹா ரக மோட்டோர் சைக்கிள் ஒன்றும், மூன்றாவது பரிசாக 40 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. நாடளவில் இருக்கும் அவர்களின் சிறந்த அதிகாரிகளுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

Related News