பினாங்கில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் முந்தைய அரசாங்கம் செய்த புறக்கணிப்பை ஈடுசெய்யும் வகையில் மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் கிடம் பாகன் ஜசெகவின் தொடர்புக்குழு வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஜசெக பாகான் தொகுதியின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட மூன்று முக்கியத் தீர்மானங்களில் இந்த விவகாரமும் ஒன்றாகும்.
மேலும், முந்தைய அரசாங்கம் செய்தது போல, மாணவர் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொள்ளாத - நியாயமற்ற மேம்பாட்டு நிதியை தாய்மொழிப் பள்ளிகளுக்கு வழங்கும் முறையையும் நிபோங் தெபால் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஃபத்லினா நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.
குறைந்தது கடந்த 2018 ஆம் ஆண்டில் தேசிய முன்னணி வழங்கியத் தொகையையோ அல்லது அதற்குப் பின் தேசியக் கூட்டணி கொடுத்த நிதியையோ வழங்க வேண்டும். அந்தத் தொகையைக் குறைக்கக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டது. .
"பினாங்கில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மலாய் மொழி, ஆங்கிலம், எஸ்.தி.இ.எம் மன்டரின் ஆகிய பாடங்களில் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனையை உடனடியாக தீர்க்குமாறும் ஃபத்லினாவுக்குக் கோரிக்கை விடுத்துள்ளதை பாகான் ஜசெக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..








