Oct 9, 2026
Thisaigal NewsYouTube

அரசாங்கம் கட்டுப்பாட்டுப் பொருளான டீசல் எரிபொருளை கடத்திய குற்றத்திற்காக 20 வயதுடைய இளைஞன் கைது!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அரசாங்கம் கட்டுப்பாட்டுப் பொருளான டீசல் எரிபொருளை கடத்திய குற்றத்திற்காக 20 வயதுடைய இளைஞன் கைது!

அலோர் ஸ்டார், ஜூன்.27-

அலோர் ஸ்டார், சங்லுனியிலுள்ள கம்போன் அலோர் ஜன்குஸ் எனும் இடத்திலிருக்கும் செம்பனைத் தோட்டத்தில் அரசாங்கம் கட்டுப்பாட்டு பொருள் பட்டியலில் அமைந்துள்ள டீசல் எரிபொருளைக் கடத்திய குற்றத்திற்காக உள்நாட்டைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டிருப்பதாக கெடா மாநில உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு இலாகாவின் தலைமை அதிகாரி முகமாட் நிஜாம் பின் ஜமலுடின் தெரிவித்தார்.

நேற்று மதியம் 4.15 மணி அளவில் குபாங் பாசு மாவட்டத்தைச் சேர்ந்த உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அலுவலகத்தின் அதிகாரிகளும் கூலிம் மாவட்டத்திலிருந்து பெட்டலியன் பொதுப்படை ( Battalion PGA Kulim) அதிகாரிகளும் இணைந்து செம்பனைத் தோட்டத்தில் நடத்திய அதிரடி சோதனையில் அங்கு காணப்பட்ட ஸ்டோர் ஒன்றில் ஒரு டேங்கர் லாரியில் குழாய் ஒன்றினைப் பொருத்தப்பட்டு 15,000 லிட்டர் டீசல் எரிபொருளை இன்னொரு டிராம் ஒன்றில் நிரப்பப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

மேலும், அவ்விடத்தில் இருந்த உள்நாட்டு இளைஞன் அந்த ஸ்டோரில் வேலை செய்வதாகத் தெரிவித்துள்ளார். டிராபிலுள்ள டீசல் எரிபொருளுக்கான உரிமம் ஆவணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்கத் தவறியதால் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக முகமாட் நிஜாம் ஜமலுடின் குறிப்பிட்டார்.

இச்சோதனையின் மூலம் வெ 47,250.00 ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு இக்குற்றச் செயல் Akta Kawalan Bekalan 1961 கீழ் விசாரணை நடத்தப்படும் என்றார் முகமாட் நிஜாம்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →