Jul 10, 2026
Thisaigal NewsYouTube
லங்காவியை புக்கெட், பாலியுடன் ஒப்பிட வேண்டாம் – கெடா சுல்தான் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

லங்காவியை புக்கெட், பாலியுடன் ஒப்பிட வேண்டாம் – கெடா சுல்தான் வலியுறுத்து

Share:

அலோர் ஸ்டார், ஜூலை.05-

நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான லங்காவியை, தாய்லாந்தின் புக்கெட் அல்லது இந்தோனேசியாவின் பாலி போன்ற சுற்றுலாத் தலங்களுடன் ஒப்பிடக்கூடாது என்று மேன்மை தங்கிய கெடா மாநில சுல்தான் Sultan Sallehuddin Sultan Badlishah தெரிவித்துள்ளார்.

லங்காவியின் வளர்ச்சி வெளிநாட்டு சுற்றுலா தீவுகளைப் பின்பற்றும் வகையில் இருக்கக் கூடாது என்றும், அதன் இயற்கை வளங்கள் மற்றும் தனித்துவமான சுற்றுலா அம்சங்களே அதன் மிகப் பெரிய பலம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், லங்காவியின் வளர்ச்சி அதன் சொந்த அடையாளம் மற்றும் தனித்துவத்தை அடிப்படையாகக் கொண்டே அமைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், மற்ற சுற்றுலாத்தலங்களை முன்மாதிரியாகக் கொண்டு அது உருவாக்கப்படக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், லங்காவியின் உண்மையான பலம் அதன் இயற்கை வளங்களும் தனித்துவமான பாரம்பரியமும் தான் என்றும், இந்த அரிய சொத்துகளைப் பாதுகாத்து நிலையான முறையில் மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அலோர் ஸ்டாரில் உள்ள Istana Anak Bukit-இல் இன்று, தனது 84-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாநில விருதுகள் வழங்கும் விழாவில் சுல்தான் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், லங்காவி கெடா மாநிலத்திற்கும் மலேசியாவிற்கும் முக்கியமான மூலோபாய சொத்தாக இருப்பதுடன், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் முன்னணி சுற்றுலா மையமாகவும் திகழ்கிறது என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்