தனது கைபேசியில் ஆபாச வீடியோக்களை வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 32 வயது பெண்ணிற்கு கிளந்தான், பாச்சோக் மாஜி ஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று,2,000 ரிங்கிட் அபராதம் விதித்தது. .
கடந்த ஏப்ரல் 6-ஆம் திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் கம்போங் குபாங் தெலகாவில் உள்ள ஒரு வீட்டில் அந்த மாது தனது கைபேசியில் ஆபாசப் பதிவுகள் வைத்திருந்தது கண்டறியப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
அந்த மாதுவின் சார்பில் ஆஜரான தேசிய சட்ட உதவி அறக்கட்டளை வழக்கறிஞர் நோரிசைடா அப்துல் சலாம், குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு தனித்து வாழும் தாய்மார் என்றும், உணவக உதவியாளராக நாள் ஒன்றுக்கு 35 ரிங்கிட் மட்டுமே சம்பாதிப்பவர் என்றும் கூறி குறைந்தபட்ச அபராதம் விதிக்குமாறு கோரினார்.
இதனையடுத்து, மாஜி ஸ்திரேட் பக்ருல் ராசி அப்ட் ஹமீத் 2,000 ரிங்கிட் அபராதம் அல்லது அதனைச் செலுத்தத் தவறினால் ஆறு மாதச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். அந்தப் பெண் அபராதத் தொகையைச் செலுத்தினார்.








