Dec 8, 2025
Thisaigal NewsYouTube
எஸ்.பி.ஏ நெடுஞ்சாலையில் கார் விபத்து: 22 வயது இளைஞன் பலி!
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.ஏ நெடுஞ்சாலையில் கார் விபத்து: 22 வயது இளைஞன் பலி!

Share:

அலோர் காஜா, டிசம்பர்.07-

இன்று அதிகாலை 3 மணியளவில் SPA எனப்படும் Sungai Udang - Paya Rumput - Alor Gajah நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில், 22 வயதான இளைஞன் ஒருவன் ஓட்டிச் சென்ற புரோட்டோன் சத்ரியா கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். விபத்துக்குள்ளான கார் சாலையின் ஓரத்தில் உள்ள புதர்களுக்குள் புகுந்து விட்டதாக அலோர் காஜா மாவட்ட காவற்படைத் தலைவர், சுப்ரிண்டெண்டன் அஹ்மாட் அபு பக்கார் தெரிவித்தார்.

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அந்த இளைஞன், சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டான். உடல் உடற்கூறு ஆய்வுக்காக அலோர் காஜா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்தக் கோர விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் விசாரணைக்கு உதவ விபத்தைக் கண்டவர்கள் முன்வருமாறு காவற்படை கேட்டுக் கொண்டுள்ளது.

Related News

எஸ்.பி.ஏ நெடுஞ்சாலையில் கார் விபத்து: 22 வயது இளைஞன் பலி! | Thisaigal News