சிரம்பான், ஆகஸ்ட்.22-
இம்மாதம் 18 ஆம் தேதி, நெகிரி செம்பிலான், ஜாலான் தெமியாங்கில் நிகழ்ந்த விபத்தில் 23 வயது காவல் துறை அதிகாரி நாயிம் முல்லா முகமட் அஃப்ப்ஃண்டி உயிரிழந்த சம்பவத்தில், அதிகப்படியான மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டி, உயிரிழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட லாரி ஓட்டுநர் 27 வயது கே. கெல்வின் ராஜ், நீதிமன்றத்தில் தனது குற்றத்தை மறுத்துள்ளார்.
இப்விபத்து சம்பவ நாளன்று அதிகாலை 1.25 மணி அளவில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. குற்றச்சாட்டை மாஜிஸ்திரேட் நூருல் ஃபார்ஹா சுலைமான் முன்னிலையில் வாசிக்கப்பட்ட போது கெல்வின் ராஜ் அதனை மறுத்துள்ளார். 5,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்ட கெல்வின் ராஜின் வழக்கு விசாரணை எதிர்வரும் அக்டோபர் 16-ஆம் தேதி மீண்டும் தொடங்க உள்ளது.








